முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பழனிக்கு செக்மேட் வைத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

பழனிக்கு செக்மேட் வைத்த அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

சீல் வைக்க வந்த பழனிக்கு செக்மேட் வைத்த அமுதா அடுத்து நட்க்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடக்கும்போது வீட்டுக்கு சீல் வைக்க பழனி ஆட்களுடன் வருகின்றனர். அவர்கள் வீட்டை சீல் வைக்க போகும் சமயம் அமுதா அசால்டாக இருக்கிறாள்.

மேலும் அமுதா பழனியை எதிர்த்து பேசி உனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு ஒரு போன் வரும் என சொல்ல அதே போல் பழனிக்கு அவனது வீட்டை சீல் வைக்க போவதாக போன் வருகிறது. போன் காலில் குமரேசன் பழனியிடம் நீ எதுவும் பண்ணாம கிளம்பி வா என சொல்கிறான். ப்ளாஷ் கட்டில்

பழனி தங்கைக்கு பெண் பார்க்க ஆட்கள் வந்திருக்க வீட்டை சீல் வைக்க ஆட்கள் வருகின்றனர்‌. செல்வராஜ் ஆட்களுடன் வந்த நிலையில் குமரேசன் செல்வாராஜிடம் இது நியாயமில்ல என சொல்ல, செல்வராஜ் நான் எப்பவும் நியாயத்து பக்கம்தான் நிப்பேன், நீ உடனே உன் மகனுக்கு போன் பண்ணி அமுதா வீட்லேர்ந்து வரச் சொல்லு என சொல்கிறான். இது அமுதாவின் ஏற்பாடு என தெரிய வருகிறது.

அதன் பிறகு அமுதா பழனியிடம் உங்க வசதி எப்படி இங்க சீல் வச்சா அங்க சீல் வைக்கிறோம் எப்படி வசதி என அமுதா கேட்க பழனி அலறிப்போய் கிளம்புகிறான். அடியாட்கள் சாமான்களை எடுத்து வீட்டில் வைக்கின்றனர்.

அதன் பிறகு செல்வா-புவனா தாலி பிரித்து கோர்ப்பது நல்லபடியாக நடந்து முடிகிறது. அடுத்து சிதம்பரம் பழனியிடம் இது நம்ம பைனான்ஸ் ஆட்கள் பண்ற வழக்கம் கிடையாது என சொல்ல, பழனி கொஞ்சம் வாய பொத்துறீங்களா என சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

பழனி சிதம்பரத்திடம் அதான் எழுதி குடுத்தாச்சு இல்ல இனி இப்படித்தான் என பழனி சொல்ல சிதம்பரம் அவமானப்பட்டு நிற்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv