முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அன்னத்துக்காக அமுதா எடுத்த அதிரடி முடிவு - அடுத்தக்கட்டம் சென்ற ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்

அன்னத்துக்காக அமுதா எடுத்த அதிரடி முடிவு - அடுத்தக்கட்டம் சென்ற ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அன்னத்துக்காக அமுதா எடுத்த அதிரடி முடிவு என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் அமுதா சொன்னபடி மல்லிகைப் பூ, அல்வாவுடன் வந்து அமுதாவிடம் அதை குடுக்க, அமுதா என்ன என கேக்க, நீ கேட்டேல்ல அதான் வாங்கிட்டு வந்தேன் என சொல்கிறான்.

உடனே அமுதா சித்தப்பா, சித்தப்பா என கூப்பிட மாணிக்கம் வருகிறான். அமுதா அவரிடம் சித்தப்பா உங்க மருமகன் பண்ண வேலையை பாருங்க என சொல்ல, மாணிக்கம் செந்திலிடம் கண்ணால் என்ன என கேக்க, அவன் மல்லிகைப் பூவையும், அல்வாவையும் காட்டுகிறான். உடனே மாணிக்கம் நீ தானம்மா வாங்கிட்டு வரச் சொன்னே என சொல்ல, ஆமா சித்தப்பா நான் தான் வாங்கிட்டு வரச் சொன்னேன், அல்வா எனக்கு பிடிக்கும், நான் சாப்பிட வாங்கிட்டு வரச் சொன்னேன், பூ சாமி படத்துக்கு போட சொல்லுங்க என சொல்லிவிட்டு செல்ல, செந்தில் புரியாமல் பார்க்கிறான்.

இரவு கதவு அடித்துக் கொண்டிருக்க வெளியே வரும் அமுதா முன் தோன்றிய செந்தில் அப்பா அன்னம் இரண்டு நாளா சாப்பிடல. மகளுக்கு எதுவும் முறையா நடக்கலன்னு கவலை நீ தான் சரி பண்ணனும் என சொல்ல அவள் புரியாமல் விழிக்கிறாள்.

நீங்க ரெண்டு நாள் சாப்பிடலயா என கேட்க அன்னம் அதிர்ச்சி அடைகிறாள். தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என அன்னம் சொல்ல அமுதா அவளை அழைக்க முடிவு செய்கிறாள்.

வடிவேலு அப்பா சொன்னாரா என கேலியாக கேட்க அப்பாவின் புகைப்படம் வடிவேலு தலையில் விழுந்து புகைப்படம் வெட்டி அவன் தலையில் ரத்தம் வர அனைவரும் புதிராக பார்க்கின்றனர். பிறகு அமுதா தம்பிக்கு போன் செய்து புவனாவுக்கு தாலி பிரித்து கோர்க்க வேண்டும் அதற்கு நீதான் அவளை அழைத்து வர வேண்டும் என கேட்கிறாள்.

செல்வாவோ அப்பா வருவதற்கு கண்டிப்பாக ஒத்துக்க மாட்டார் நம்ம வீட்டில் யாரு வரலைனாலும் இந்த விஷயம் நடக்கனும் என சொல்கிறான். பிறகு செல்வா சிதம்பரத்திடம் விஷயத்தை சொல்ல, அவர் முடியாது என சொல்லிவிட்டு போகிறார்.

பின்னர் இளங்கோ செல்வாவுக்கு ஆறுதல் சொல்ல, நாகு இருவரையும் திட்டுகிறாள். இளங்கோ செல்வாவிடம் உன் மனசுக்கு என்ன படுதோ அதைப் பண்ணு என சொல்ல செல்வா அமுதாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறான். அமுதா நாளை மறுநாள் நல்ல நாள் பண்ணிரலாம் என முடிவெடுத்து அன்னத்திடம் விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv