முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலை காப்பாற்றிய அமுதா... குமரேசனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

செந்திலை காப்பாற்றிய அமுதா... குமரேசனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

கடைசியில் செந்திலை காப்பாற்றிய அமுதா, குமரேசனுக்கு விட்ட சவால் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கரஸ் செந்தில் நீ இதுல ஒரு கையெழுத்து போட்டு டிசி வாங்கிட்டு கிளம்பு என சொல்ல அமுதா பிரின்சியிடம் இவரு தரப்புல என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா, அந்த பொண்ணு சொன்னா நம்பிடுவீங்களா என கேக்க, வாத்தியார் கண்ணால பார்த்த சாட்சி நான் இருக்கேன் வேற அதுமட்டுமில்ல அவங்க அப்பாவும் இதை தான பண்ணுனாரு, அவன் ரத்தத்துலயே இது ஊறி இருக்கு என சொல்ல அன்னலட்சுமி அழுகிறாள்.

அடுத்து அமுதா என் புருஷன் தப்பு பண்ணலேங்குறதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி. பிறகு அமுதா பென் டிரைவை எடுத்து கொடுக்க பிரின்சிபால் அதை பிளே செய்ய, லேப்பில் அந்த பெண் ஆடையை தானாக கிழிப்பது, வாத்தியார் அங்கு வந்து செந்திலை மிரட்டியது எல்லாம் இருக்க, அனைவரும் ஷாக்காகிறார்கள்.

பிரின்சி வாத்தியாரை உங்களை தான் முதல்ல காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணனும் என சொல்கிறார். அமுதா இந்த மாதிரி வாத்தியாரால தான் மொத்த வாத்தியாருக்கும் கெட்ட பேரு.. பசங்களுக்கு நல்லதை சொல்லி குடுக்குறதை விட்டுட்டு தப்பு தப்பா சொல்லி குடுத்துருக்காரு, ஒவ்வொரு குடும்பமும் பிள்ளைகளை வாத்தியாரை நம்பி தான் அனுப்புறாங்க.. பிள்ளைங்க வீட்டுல இருக்குற நேரத்தை விட வாத்தியாருங்க கூட தான் இருக்காக, உங்களை நம்பி அனுப்புறதுக்கு நீங்க பண்றது சரியா என கேட்கிறாள்.

அடுத்து பிரின்சிபால் பெண்ணுக்கும் டிசி குடுத்து அனுப்பி விடலாம் என சொல்ல, அமுதா வேண்டாம் சார், இந்த பொண்ணு பண்ணுன விஷயம் வெளிய தெரிஞ்சா, பொண்ணுங்களே இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்க.. எல்லா இடத்துலயும் நிறைய பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்ல, இந்த பொண்ணு சொன்ன பொய்யால ,மத்த பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு வந்துரும், அப்புறம் உண்மையா நடக்குறதை வெளில சொல்ல மாட்டாங்க, அதனால இந்த பொண்ணுக்கு டிசி எல்லாம் குடுக்க வேண்டாம் மன்னிச்சி விட்டுருங்க என சொல்கிறாள்.

மறுபக்கம் கார் ஒன்று நின்று கொண்டிருக்க உள்ளே குமரேசன் பம்மியபடி இருக்க அமுதா காரை நோக்கி வந்து கார் கண்ணாடியை தட்ட, கதவு திறக்க குமரேசனிடம் உங்க திட்டம் எதுவும் பலிக்காது.. எங்க மாமாவுக்கு பண்ண மாதிரி இவுகளையும் காலி பண்ணிரலாம்னு நினைச்சீகளா, நான் இருக்குற வரைக்கும் நீங்க நினைக்கிற எதுவும் நடக்காது என சவால் விட்டு செல்கிறாள்.

அடுத்து அன்னலட்சுமி மாணிக்கத்திடம் ஏதோ கடவுள் செஞ்ச புண்ணியத்தால தான் அமுதா என் மருமகளா வந்திருக்கா என சொல்ல, மாணிக்கம் உன் மருமக புராணம் பாடுனது போதும் போய் காபி கொண்டுவாக்கா என சொல்ல அன்னலட்சுமி நகர்கிறாள். செந்தில் பேனாவையே பார்த்துக் கொண்டிருக்க, மாணிக்கம் யோவ் மாப்பிள்ளை உன் பொண்டாட்டி அந்த தீபாவோட லிங்க் அடிச்சிருவேன்னு கேமரா வைச்ச பேனாவை குடுத்துருக்கா, அதுல ஏதோ நல்ல விஷயம் நடந்துருக்குய்யா என சொல்கிறார். மேலும் மாணிக்கம் அமுதாவிடம் நீ என்னமோ பிளான் பண்ணி தான் பேனாவை குடுத்துருக்கேன்னு தெரியும்மா, உனக்கு எப்படிம்மா அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுது என கேக்க, சித்தப்பா நம்ம நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க பல வழில சிந்திப்பாக, நாம அதை விட அதிகமா யோசிக்கனும் , அவுக அப்பாவுக்கு நடந்த மாதிரி இன்னொரு விஷயத்தை பண்ணிரலாம்னு அவங்க நினைக்கிறாங்க, அதை விடக் கூடாது என சொல்ல, மாணிக்கம் அமுதாவை நினைத்து பெருமை கொள்கிறார்.

மாணிக்கத்திடம் செந்தில் எனக்காக என்னெல்லாமோ பண்றா, என்னை ஏன் இன்னும் ஏத்துக்கிட மாட்டேங்குறா என புலம்ப, அமுதா வந்தவள் என்ன வேணுமாம் உங்க மருமகனுக்கு என கேட்க மாணிக்கம் அவளிடம் என் மருமகன் நல்லாபடிக்க ஆரம்பிச்சிட்டான், நீ சொல்றதை கேக்க ஆரம்பிச்சிட்டான், உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அமுதா சஞ்சீவி மலையை பேர்த்து எடுத்துட்டு வரச் சொல்லுங்க என சொல்லுங்க இருவரும் முழிக்கின்றனர்.

மாணிக்கம் வேற ஏதாவது சொல்லும்மா என கேக்க, அமுதா யோசிக்கிறாள். பிறகு அமுதா மாணிக்கத்திடம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க என சொல்ல, மாணிக்கம் செந்திலிடம் டேய் மாப்பிள்ளை அசத்து என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv