முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோழியால் செந்திலுக்கு வர போகும் சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

தோழியால் செந்திலுக்கு வர போகும் சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

தோழியால் செந்திலுக்கு வர போகும் சிக்கல், தீபாவை வைத்து பழனி போடும் திட்டம் அடுத்து நடக்கப்போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா, அன்னம், மாமா என மூவரும் படிக்கலயா என செந்திலிடம் கேட்க அவன் தடுமாறுகிறான். நிலைமையை சமாளிக்க காபி கேட்கிறான்.

அடுத்து அமுதா காபி போட போன நேரத்தில் தீபாவை கிளப்ப முயற்சி பண்ண அமுதா காபி கோப்பையுடன் வருகிறாள். செந்தில் அருகே வந்து இதை தீபாவுக்கு கொடுங்க என சொல்ல செந்தில் முகம் மாறுகிறது.

அடுத்து தன்னை பாடம் சொல்லி கொடுக்க வர சொன்னதே அமுதா தான் என தீபா சொல்ல செந்தில் வழிகிறான். பிறகு தீபா பாடம் சொல்லி தர செந்தில், அமுதாவை கவனிக்க அவளோ வேலை செய்தபடி இருக்கிறாள். பிறகு தீபா பாடம் சொல்லி கொடுத்து விட்டு கிளம்புகிறாள். போகும் போது இங்கே இருந்தால் அவன் படிக்க மாட்டான் உன்னை தான் சைட் தான் அடிப்பான் என சொல்கிறாள்.

மேலும் தீபா அமுதாவிடம் அம்மன் கோயில்ல வச்சு நான் பாடம் சொல்லி குடுக்குறேன் என சொல்லிவிட்டு செல்ல, மாணிக்கம் செந்திலை நக்கல் செய்கிறார். இந்த நேரத்தில் வடிவேலுவை வீட்டில் இறக்கி விட வரும் பழனி தீபாவை பார்க்கிறான்.

வடிவேலு தீபாவை பற்றி பழனியிடம் சொல்ல பழனி இவளை வைத்து ஏதாவது செய்யலாம் என திட்டம் தீட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv