முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம்.. 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம்.. 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம், வீட்டை விட்டு வெளியேறிய அமுதா என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிதம்பரம் அன்னத்திடமும் வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அதன் பிறகு அமுதா வீட்டிற்கு வர அப்பா மன்னிப்பு கேட்ட விஷயம் தெரிந்து கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அமுதா கோபத்துடன் வந்து சாமியை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க, செந்தில் மாமாவுடன் வந்து அமுதாவை வீட்டுக்கு வரச்சொல்ல, அதை அமுதா மறுக்கிறாள். அத்தை என்னை விட்டுக் கொடுத்து விட்டார்கள் அதையும் தாண்டி வடிவேல் காலில் எங்கப்புச்சி விழும்போது எப்படி அதை அனுமதிச்சாங்க என வருத்தத்துடன் சொல்கிறாள்.

அன்னம் அமைதியாக என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, வடிவேல் அம்மா நீ அண்ணி வீட்டைவிட்டு போனதற்காக ரொம்ப வருத்தப்படுறனு எனக்கு தெரியும், என்னால நம்ம வீட்டுல பிரச்சனை வந்துறகூடாது அதுக்காக நான அண்ணியிடம் போயி மன்னிப்பு கேட்டு கூட்டி வரேன் என சொல்லி நடித்து கிளம்புகிறான்.

வடிவேல் அமுதா இருக்கும் இடத்திற்கு வந்து அவளிடம் நக்கலாக கோபத்துல இங்க வந்து உட்கார்ந்துட்டா உங்கப்புச்சி பட்ட அவமானம் சரியா போயிடுமா? என்னைய அடிச்சி அவமான படுத்துன அந்த ஆள எப்படி என் காலுல விழ வைச்சேன் பாத்தியா என நக்கலாக பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv