முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலை கொன்ற பழனி? அமுதா எடுத்த அதிரடி முடிவு - பரபர கட்டத்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்!

செந்திலை கொன்ற பழனி? அமுதா எடுத்த அதிரடி முடிவு - பரபர கட்டத்தில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

செந்திலை கொன்ற பழனி? அமுதா எடுத்த அதிரடி முடிவு என பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அன்னலட்சுமி அமுதாவிடம் என் பிள்ளை வாத்தியார் ஆனால் இவங்களுக்கு என்ன பிரச்சனை என கேக்க, அமுதா பிரச்சனை இருக்கு அத்தை என சொல்கிறாள்.

அதற்கு அடுத்ததாக மாணிக்கம் அன்னத்திடம் மாமாவோட அப்பாவோட பேர்ல அந்த பள்ளிக் கூடம் இருக்கு, அந்த பள்ளிக் கூடம் பேர்ல பல கோடி சொத்து இருக்கு.இந்த குடும்பத்துல வாத்தியாரா இருக்குறவனுக்கு தான் அந்த பள்ளிக் கூடம்னு உயில்ல இருக்கு, மாமா வாத்தியாரா இருந்தாரு அதனால அவரை கொன்னாங்க, செந்திலும் வாத்தியாரானா சொத்து போயிரும்னு தான் கொன்னுருக்காங்க என சொல்ல, அன்னம் அடப்பாவிங்களா இதை முதல்லயே சொல்லிருந்தா என் பிள்ளைய படிக்க வச்சிருக்கவே மாட்டனே என புலம்புகிறாள்.

அதற்கு அடுத்ததாக அமுதாவும் அன்னமும் வந்து கொண்டிருக்க, உமா,பழனி அவர்களை வழி மறித்து உன் பிள்ளையை படிக்க வச்சு மொத்த சொத்தையும் அடிக்கலாம்னு பார்க்குறியா, இனிமே உங்க வீட்டுல யாராலயும் வாத்தியாராக முடியாது, உன் மருமகளால முடியாது, எங்க வீட்டுல இருந்து உமா டீச்சராவா என சொல்ல உமா நான் பி.எட் படிக்க போறேன், அந்த பள்ளிக் கூடத்தை மொத்தமா நாங்க எடுத்துக்க போறோம் என சொல்கிறாள்.

அதன் பிறகு அமுதா பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும் என சொல்ல, அன்னம் செந்திலே இல்லேன்னு ஆகிப் போச்சு இப்ப எதுக்காக அங்க போகனும் என சொல்ல, மாணிக்கம் நானும் சொல்லிட்டேன், அமுதா கேக்க மாட்டாங்குறா என சொல்கிறார். பிறகு அமுதா இன்னைக்கு பள்ளிக்கூடத்தை அவங்க எடுத்துக்க போறாங்க, நம்மளும் வாரிசுங்குறதுனால நீங்க ஒரு கையெழுத்து போட வேண்டியதிருக்கும் அதனால வரச் சொல்லிருக்காங்க, அவங்க கைக்கு போக விடாம தடுக்க நாம போராடனும் என சொல்ல மூவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

Also read... அஜித்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்! - திரைத்துறையினர் இரங்கல்

பிறகு பள்ளிக்கு வரும் அமுதா குடும்பத்தை பார்த்து உமா& கோ முறைக்கின்றனர். அப்போது ஒரு பெண் அமுதாவிடம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டிய ஸ்கூல் சீட்டை தர மறுப்பதாக சொல்கிறார். அதன் பிறகு அமுதா அன்னம் ஆகியோர் உள்ளே வர உமாவின் குடும்பம் நக்கலடித்து பேசுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv