முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவுக்கு அன்னம் கொடுத்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவுக்கு அன்னம் கொடுத்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

விஷத்தை குடித்த வடிவேலு, அமுதாவுக்கு அன்னம் கொடுத்த அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னம் அமுதாவிடம் வடிவேலுக்கு ஏதாவது வழி பண்னனும்னு தான் அந்த காண்ட்ராக்டை குடுக்க சொன்னதாக சொல்ல வடிவேல் என்னை என் மாமனாரும் மதிக்க மாட்டாரு, இந்த வீட்டுலயும் மரியாதை இல்ல அதனால எதுக்கு உயிரோட இருக்கனும், விஷம் குடித்து விட்டதாக சொல்லி கீழே விழுகிறான்.

இதனால் அனைவரும் பதறி அவனை மருத்துவமனையில் சேர்க்க கர்ப்பமாக இருக்கும் சுமதி அமுதாவிடம் உன்னால் தான் எல்லாம் என்று அழுகிறாள். மேலும் நீ என் குழந்தையை அனாதையாக்க பார்க்குற, நான் எங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை சும்மா விட மாட்டேன் என சொல்கிறாள்.

அதன் பிறகு அமுதா அன்னமிடம் பேச முயற்சி செய்ய அமுதாவை தவறாக நினைத்து அவள் நீ செய்தது தவறு என்று சொல்கிறாள். மேலும் வடிவேலுக்கும் குழந்தை பிறக்க போகுது.. இந்த நேரத்துல நீ இப்படி பண்ணிருக்க கூடாது என வருந்துகிறாள்.

Also read... தேவதை வம்சம் நீயோ... புடவையில் மயக்கும் நடிகை வாணி போஜன்!

இதையடுத்து செல்வராஜ் வேகவேகமாக மருத்துவமனைக்கு வர அமுதாவை திட்ட போகிறார் என்கிற பில்டப் எகிற அவர் அமுதாவுக்கு சப்போர்ட்டாக பேச, சுமதி அதிர்ச்சி அடைகிறாள். செல்வராஜ் சுமதியிடம் போட்டி போடலாம் அதுக்காக இப்படி பண்ணக் கூடாது என்று சொல்கிறான்.

இதையடுத்து அமுதா என்ன தான் சொன்னாலும் நான் தானே அவரு எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என்று வருந்த செல்வராஜ் அவளிடம் ஒரு நிமிஷம் இரும்மா நான் உள்ள போய் பார்த்துட்டு வர்றேன் என்று உள்ளே செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv