முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இன்ஸ்பெக்டருக்கு தண்ணி காட்டிய செல்வா... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

இன்ஸ்பெக்டருக்கு தண்ணி காட்டிய செல்வா... அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

இன்ஸ்பெக்டருக்கு தண்ணி காட்டிய செல்வா, எக்ஸாம் எழுத வந்த செந்திலுக்கு ஷாக் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நாளைக்கு செந்திலுக்கு பரிட்சை, அதை எழுதலன்னா அவன் ஆயுசுக்கும் எழுத முடியாது எனசொல்லி மாணிக்கமும் அன்னமும் புலம்புகின்றனர்.

இதை பார்த்து அமுதா யோசித்துவிட்டு செல்வாவுக்கு போன் பண்ணி பேச, அவர் நீ எதுக்கும் கவலை படாத நான் பாத்துக்கிறேன் என ஆறுதல் சொல்கிறார்.

அதற்கு அடுத்ததாக போலீஸ் இன்னோவா காரில் வர, அதிலிருந்து போலீஸ் உடையில் செல்வராஜ் இறங்குகிறார். அவரை பார்த்து வாசலில் நிற்க்கும் போலீஸ்காரர் சல்யூட் பண்ண அமுதா அவரை கண்டுபிடித்து கேட்க நீ எதையும் கண்டுக்காம இரு, நான் பார்த்துக்கொள்கிறேன் என உள்ளே வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்திருக்கும் டிஎஸ்பி என சொல்ல ஸ்டேஷனில் இருப்பவர்கள் அனைவரும் பயப்படுகின்றனர், லாக்கப்பில் இருக்கும் கைதிகளை பற்றி விசாரித்து சிலருடன் சேர்த்து செந்திலையும் வெளியே கூட்டி செல்கிறார். ஓரிடத்தில் வண்டி நிற்க அப்போது அங்கு அமுதா அன்னம் மாணிக்கம் மூவரும் வருகின்றனர். அமுதா அவரிடம் என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க இது தப்பு இல்லையா வேற எதாவது பிரச்னை வந்துறப்போகுது என கேட்கின்றனர்.

அதற்கு செல்வா காலையில அவன் பரிட்சை எழுதணும்ல. மத்த விஷயத்த அப்பறம் பாத்துக்கலாம், என சொல்லி அவனை தன்னுடன் கூட்டி செல்கிறார். செந்திலை காலையில் கோர்டில் கொண்டுபோய் நிறுத்தி அவனை உள்ளே தள்ளிவிடு என பழனி சொல்ல, புது டிஎஸ்பி வந்து அழைத்து சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.  அதை கேட்டு பழனி அமுதா திட்டம் போட்டு சம்பவம் பண்ணிவிட்டாள். முட்டாள் என இன்ஸ்பெக்டரை திட்டுகிறான்.

Also read... இணையத்தில் வைரலாகும் ஷாருக் கானின் ஃபேமிலி ஃபோட்டோஸ்!

அதற்கு இன்ஸ்பெக்டர் காலையில் எக்ஸாம் எழுததான வருவான் வரட்டும் என சொல்லி காலேஜ் வாசலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மறைந்திருக்க செல்வா செந்திலை அழைத்துக்கொண்டு காரில் வருகிறான்.

போலீஸ் காரின் அருகே சென்று காரை நிறுத்தி செக் பண்ண செந்தில் மாதிரி ஒருவன் இருக்க பிகு அவன் செந்தில் இல்லை என தெரிந்து, இன்ஸ்பெக்டர் சரி போக சொல்லு அவங்கள என கேசுவலாக விட்டு விடுகிறார்.

அடுத்து காட்டு பகுதிக்குள் செந்தில் ஓடிவந்து காலேஜ் காம்ப்வுண்ட் சுவர் ஏறி காலேஜ்க்குள் குதிக்கிறான். பரிட்ச்சை எழுத வந்து விட்டோம் என நிம்மதியாக திரும்ப, அங்கு இன்ஸ்பெக்டர் தன் ஆட்களுடன் நிற்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv