முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேர்தலில் ஜெயித்த அமுதாவிற்கு மீண்டும் செக் வைத்த குமரேசன் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

தேர்தலில் ஜெயித்த அமுதாவிற்கு மீண்டும் செக் வைத்த குமரேசன் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

தேர்தலில் ஜெயித்த அமுதாவிற்கு மீண்டும் செக் வைத்த குமரேசன், நடந்தது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பள்ளிக் கூட நிர்வாகி ஒருவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வந்து அமுதாவிடம் வாங்க சொல்கிறார். செந்திலும் மாணிக்கமும் பழனி & கோவை கிண்டல் செய்கின்றனர். பழனி கரசிடம் காமராஜரை பத்தி பேசி ஜெயிச்சிட்டா என கோபப்படுகிறான்.

அதை தொடர்ந்து அமுதா வெற்றி பெற்றவுடன் கதிரேசன் அவள் முன் தோன்ற, அமுதா நான் ஜெயிச்சிட்டேன் என சொல்லி சந்தோஷப்பட நல்லவங்க ஜெயிக்க கொஞ்ச கால தாமதம் ஆகும், கடைசில நல்லவங்க தான் ஜெயிப்பாங்க, என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு என சொல்கிறார்.

மறுபக்கம் உமா பழனியிடம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவ கரசாகப் போறா, என்னால தாங்க முடியாது என சொல்ல, குமரேசன் அது நடக்காது என சொல்கிறார்.

அதற்கேற்ப வெற்றி பெற்ற சான்றிதழை அமுதா வாங்கப் போகும் சமயம் வக்கீல் ஒருவர் வந்து தேர்தல்ல முறைகேடு இருக்குன்னு ஸ்டே ஆர்டர் வாங்கிட்டாங்க, சட்டப்படி இந்த தேர்தல் செல்லாது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

கரஸ் குமரேசனிடம் கோர்ட்டுல இருந்து ஜட்ஜ் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப் போறாரு, விசாரிச்சாருன்னா நியாயம் அவங்க பக்கம் தான இருக்கும் என சொல்ல, ஜட்ஜ் வருவாரு, தீர்ப்பை சொல்லுவாரு ஆனா அவர் சொல்லப் போற தீர்ப்பு நமக்கு சாதகமாத்தான் இருக்கும், அதுக்கு அவரை பணம் குடுத்து வாங்கியாச்சு என சொல்ல கரஸ் சந்தோஷப்படுகிறார். பள்ளி நிர்வாகி ஒருவர் அதை கேட்டு விடுகிறார்.

பிறகு அமுதா அன்னலட்சுமியிடம் தர்மம் நம்ம பக்கம் தான் இருக்கு, நாம தான் ஜெயிப்போம் என சொல்லிக் கொண்டிருக்க பள்ளி நிர்வாகி கரசும் குமரேசனும் பேசியதை அமுதாவிடம் சொல்கிறார்.

Also read... இணையத்தை தெறிக்கவிடும் ஜான்வியின் நியூ போட்டோஸ்

அமுதா பள்ளி நிர்வாகிகளிடம் எப்படி தேர்தல் முறைகேடு நடந்துச்சுன்னு சொல்லுங்க என கேட்க அமுதா அவர்களிடம் அவங்க தீர்ப்பை முன்னாடி எழுதி வச்சுட்டு ஜட்ஜை கூட்டிட்டு வர்றாங்க என சொல்ல ஜட்ஜ் வந்து விசாரிச்சாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம் என்று சொல்கின்றனர்.

பிறகு ஜட்ஜ் வந்து இறங்க, அமுதா அது செந்திலை கோர்ட்டில் வைத்து எக்சாம் எழுத சொன்னவர் என்பது தெரிய வருகிறது. மாணிக்கம் செந்திலும் நிர்வாகிகளிடம் ஜட்ஜ் வரக் கூடாது என சொல்லிக் கொண்டிருக்க, அமுதா சித்தப்பா ஜட்ஜே வந்து தீர்ப்பு சொல்லட்டும் என சொல்லி ஜட்ஜை காட்ட மாணிக்கமும் செந்திலும் சந்தோஷமாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv