ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனியை தொடர்ந்து பேசும் அமுதா தனது மாமனார் சொல்வதை கேட்டு பேச்சை தொடர்கிறாள். என் மாமா கதிரேசன் வேணா செத்து போயிருக்கலாம்.. ஆனா அவர் கண்ட கனவு இன்னும் உசிரோட தான் இருக்கு. நான் இப்ப அவரோட ரூபத்துல இருக்கேன். உங்க எல்லாருக்கும் படிப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தம் இருக்குன்னு தோணலாம். இன்னைக்கு பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக் கூடம் இருக்குன்னா அது எல்லாத்துக்கும் ஒரே ஒருத்தர் தான் காரணம், பெருசா பள்ளிக் கூடத்துக்கு எல்லாம் போகாதவர் தான், எல்லாருக்கும் கல்வி அறிவு வேணும்னு பாடுபட்டவரு, அவர் யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.. எல்லாருக்கும் அவர் யாருன்னு நல்லாவே தெரியும்.. அவர் தான் கர்ம வீரர் காமராஜர் அய்யா என பேசுகிறாள்.
அதுமட்டுமில்லாமல் சாப்பாடு இல்லாமல் பசங்க பள்ளி கூடத்துக்கு வராம போயிடக் கூடாதுன்னு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவரு, அப்படிப்பட்டவர் வாழ்ந்த இந்த பூமில இந்த மாதிரி கேள்வி கேக்குறதே தப்பு. அவர் எப்படி இந்த கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணிச்சாரோ அதே வழியை நானும் பின் பற்றுவேன்.. எந்த மாதிரி பள்ளிக் கூடம் நடத்தனும்னு நானும் சில யோசனைகள் வச்சிருக்கேன்..இப்ப குழந்தைகங்க செல்போனுக்கு அடிமையா இருக்காங்க. அதனால பசங்களோட கவனச் சிதறலை சரி பண்ண, ஓடி ஆடி விளையாடுறதை ஊக்கப்படுத்தனும். கிளாஸ் ரூம்லயே வச்சு பாடம் நடத்தனும்னு அவசியம் இல்ல, ஏதாவது ஒரு கிளாஸ் மரத்தடில நடத்தலாம்.
மேலும் ஆசிரியர்கள் நண்பனா இருந்தா மட்டும் போதாதது கொஞ்சம் கண்டிப்பாவும் இருக்கனும். நான் என் சம்பள பணத்துல 10 பசங்க படிக்கிறதுக்கு உதவ போறேன். இந்த சமுதாயத்துல தேவையான விஷயங்களை கத்து குடுக்கனும்.. விவசாயத்தோட பயனையும் அதை எப்படி வளர்க்கனும்னு கத்துக் குடுக்கனும் என பேசி முடிக்கிறாள்.
Also read... குறட்டையை மையமாக வைத்து வெளியான 'குட் நைட்' படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்!
அதன் பிறகு ஓட்டு பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற பழனி, உமா என எல்லாரும் டென்ஷனாக இருக்க .செல்வா, புவனா இருவரும் ஸ்கூலுக்கு வந்து அமுதாவை கட்டி அணைத்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தேர்தலில் ஜெயிக்க போவது யார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv