முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பழனிக்கு ஷாக் கொடுத்த அமுதா.. மேடையில் பேசியது என்ன? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

பழனிக்கு ஷாக் கொடுத்த அமுதா.. மேடையில் பேசியது என்ன? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

பழனிக்கு ஷாக் கொடுத்த அமுதா, மேடையில் பேசியது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நேற்றைய எபிசோடில் பழனி அமுதாவை படிக்காதவள் என பேசி ஓட்டு சேகரித்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமுதா பேசுவதற்கு முன்னால் அமுதா போனிற்கு வீடியோ ஒன்று வருகிறது. பழனியின் ஆட்கள் செல்வாவையும் புவனாவையும் கொல்லப் போவதாக சொல்கின்றனர்.இதனால் பழனி இவங்களை நீ எப்படி காப்பாத்த போறான்னு பாக்கலாம் என சவால் விடுகிறான்.

இதையடுத்து அமுதா பழனியின் போனை பார்க்குமாறு சொல்ல பழனி தனது ஆட்களிடம் செல்வா, புவனாவை கொன்று விடுமாறு சொல்லப் போகும் சமயம் மீண்டும் அமுதா பழனியின் போனை பார்க்க சொல்ல, அதில் பழனியின் அம்மாவின் கழுத்தில் கத்தி வைத்து இருக்க அவன் அதிர்ச்சி அடைகிறான்.

அதன் பிறகு செல்வராஜ் பழனிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, பழனி ரவுடிகளிடம் புவனாவை கொல்ல வேண்டாம் என சொல்கிறான். அதனை தொடர்ந்து அமுதா மேடை ஏற பேப்பர் நழுவி செல்ல கதிரேசன் இதையெல்லாம் பார்க்கிறார்.

மேடையேறிய அமுதா பேப்பர் இல்லாமல் பேச முடியாமல் தடுமாற அனைவரும் பேசும்மா பேசும்மா என கூச்சலிடுகின்றனர். அப்போது அங்கு தோன்றும் கதிரேசன் சொல்ல சொல்ல அமுதா பேச தொடங்குகிறாள். நான் பேசுறதுல குத்தம் குறை இருந்தா மன்னிக்கனும் என சொல்லிவிட்டு, ஒருத்தரோட தலை எழுத்தை மாத்துற சக்தி கல்விக்கு தான் இருக்கு. படிக்காத நான் என்ன பண்ணப் போறேன்னு உங்களுக்கு தோணும். நாட்டுல பல சாதனைகள் செஞ்வங்க படிக்காத மேதைங்க தான். நான் இந்த பதவிக்கு போட்டி போடுறது என் குடும்பம் நல்லா இருக்கனுங்குறதுக்காவோ, இதுல வர்ற பணத்துக்காகவோ இல்லை, ஏழைக் குழந்தைங்க வாழ்க்கைல விளக்கை ஏத்த இதை ஒரு வாய்ப்பா நினைச்சு தான் இந்த பதவிக்கு நான் போட்டி போடுறேன் என சொல்கிறாள்.

Also read... வாலி அஜித் முதல் விஜய் சேதுபதி வரை.. அச்சு அசலாக குரல் மாற்றி பேசிய ஜெய்பீம் பட நடிகர்!

மேலும் படிக்காம போனவங்களுக்கு தான் அந்த படிப்போட அருமை நல்லா தெரியும். எனக்கு ஏற்பட்ட நிலைமை இன்னொருத்தருக்கு ஏற்படக் கூடாது, இன்னைக்கு ஒரு சாதாரண குடும்பத்துல வர்ற குழந்தைங்க இந்த மாதிரி பள்ளிக் கூடத்துல படிக்கிறது கனவாயிடுச்சு..தான் படிக்கலேன்னாலும் பரவாயில்ல தன் குழந்தைய படிக்க வைக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு சேரவே பரீட்சை வைக்குறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை. சம்பாதிக்கிறதுக்கு எவ்வளவோ தொழில் இருக்கு அதுக்கு இது வழி கிடையாது என மாஸாக பேசுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv