முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவின் முடிவால் பழனி மற்றும் உமாவிற்கு அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவின் முடிவால் பழனி மற்றும் உமாவிற்கு அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

தேர்தலில் நிற்க மறுக்கும் அமுதா பின்பு பழனி, உமாவுக்கு வந்த அதிர்ச்சி தகவல் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் முதல் இரவு என நினைத்துக் கொண்டிருக்க, அன்னலட்சுமி அவன் திரும்பி வந்ததற்காக அய்யப்பசாமிக்கு மாலை போடுவதற்கான ஏற்பாட்டை செய்கிறாள்.

இதனால் செந்தில் மற்றும் அமுதா பீல் பண்ணுகின்றனர். இதனைத் தொடர்ந்து அமுதா நான் கரஸ் போட்டிக்கு நிக்கவில்லை என சொல்ல அன்னம் உன் மாமாவிடமே கேள் என சொல்கிறாள்.

இதையடுத்து அமுதா கதிரேசனிடம் பேச அவர் பள்ளி விஷயத்தில் நடந்த விஷயங்களை சொல்ல அமுதா தேர்தலில் பழனியை எதிர்க்க முடிவெடுக்கிறாள்.

Also read... கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி - பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!

இதனையடுத்து அமுதா கரஸ் பதவியில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் தாக்கல் செய்ய வர செந்தில் குடும்பத்தில் இருந்து அமுதா வர மாட்டா என நினைத்து குமரேசன் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv