முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவுக்கு எதிராக திரும்பும் அன்னம்? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவுக்கு எதிராக திரும்பும் அன்னம்? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவுக்கு எதிராக திரும்பும் அன்னம், வடிவேலு செய்த சதி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வடிவேலு அன்னமிடம் அமுதா அவளது அண்ணனுக்கு காண்ட்ராக்டை குடுப்பதற்காக தான் இந்த நாடகம் என ஏற்றி விடுகிறான்.

ஆனால் அமுதா காண்ட்ராக்ட் குடுத்த விஷயத்துல என் பங்கு நிச்சயமா இல்லை என்று சொல்ல என் பிள்ளை வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன், உனக்கு எந்த சிரமும் வேண்டாம்மா என அன்னம் வருத்தத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறாள். அதற்கு அடுத்ததாக பள்ளிக் கூடத்தில் செந்தில் சாப்பிட வர, அமுதா சாப்பிடாமல் இருக்க, ஏன் சாப்பிடலை என கேக்க, மனசு சரியில்லை என அமுதா சொல்கிறாள்.

உடனே செந்தில் இந்த பள்ளிக் கூடம் சம்மந்தமான பொது விஷயம், நியாயம் எதுவோ அதை தான் நீ பண்ணனும். இப்ப நீ சாப்பிடலேன்னா நான் ஊட்டி விடுவேன் என சொல்கிறான்.

அதற்கு அடுத்ததாக அமுதா அன்னத்திடம் பேச முயல, அன்னம் அவளை அவாய்ட் செய்கிறாள். இருந்தாலும் அமுதா தொடர்ந்து பேச அன்னலட்சுமி அவளிடம் நீ உன் அண்ணனுக்கு காண்ட்ராக்ட் குடுக்க போறேன்னு சொல்லிருந்தா நான் அதை கேட்டுருக்கவே மாட்டேன் என சொல்ல, மாணிக்கம் அன்னத்தை திட்டுகிறார்.

Also read... கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனம்.. கவனிக்க வைப்பாரா கீர்த்தி சுரேஷ்? 'ரகு தாத்தா' ஷூட்டிங் அப்டேட்!

பிறகு செல்வராஜ் செந்தில் வீட்டிற்கு வந்து சுமதி வளைகாப்பிற்கு அழைக்க அமுதா அப்பாவை அழைத்தால் வருவார் என செல்வராஜிடம் சொல்கிறாள்.

பின்னர் அமுதா அப்பா சிதம்பரத்தை அழைக்க வீட்டிற்கு வர, நாகு அவளை வெறுப்பேற்றுகிறாள். அடுத்து அமுதா சிதம்பரத்தை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சிதம்பரம் எடுக்க போகும் முடிவு என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv