முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமுதாவை வீழ்த்த உமா போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவை வீழ்த்த உமா போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவை வீழ்த்த உமா போட்ட திட்டம், கரஸ் தேர்தலில் நடக்க போவது என்னஎன அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். உமாவும் பழனியும் நாகுவை சந்தித்து பணத்தை கொடுத்து சிதம்பரத்தை எப்படியாவது எங்களுக்கு ஓட்டு போட வைக்கணும் என சொல்லிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

வீட்டுக்கு வந்த நாகு சிதம்பரத்திடம் உங்களால எதுவும் உருப்படலை.. நீங்க பழனிக்கு ஓட்டுப் போடலேன்னா நானும் பூஜாவும் உசிரோட இருக்க மாட்டோம் என மிரட்டுகிறாள்.

இதையடுத்து காலையில் செந்தில், கிளம்பி வர அவனது டிரஸ்சை பார்த்து விட்டு அமுதா எதுக்காக ஆசைப்பட்டு உங்களை கல்யாணம் பண்ணிகிட்டனோ அது இன்னைக்கு நிறைவேறிடுச்சு.. என்னை பார்த்து ஊர்ல எல்லாரும் வாத்தியாரம்மா வாத்தியாரம்மா என்று சொல்லனும் என பேசுகிறாள்.

மேலும் எதுக்காக கஷ்டப்பட்டு என் ஆசையை நிறைவேத்துனீங்க என கேக்க, உன் மேல உள்ள காதல் தான் என செந்தில் சொல்கிறான். அதன் பிறகு அன்னலட்சுமி இருவருக்கும் திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்கிறாள். அதனை தொடர்ந்து அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் என அனைவரும் பள்ளிக்கு கிளம்புகின்றனர்.

Also read... மலரே நின்னை காணாதிருந்நால்... ஹேப்பி பர்த்டே சாய் பல்லவி!

மறுபக்கம் பழனியிடம் உமா இதுல ஜெயிக்கனும்னா இதை பண்ணியே ஆகனும் என ஒரு திட்டத்தை சொல்கிறாள். பிறகு கோவிலுக்கு செல்வாவும் புவனாவும் வர பழனியின் ஆட்கள் காரில் வந்து இருவரையும் கடத்தி செல்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? அமுதா என்ன செய்ய போகிறாள்? ஜெயிக்க போவது அமுதாவின் முயற்சியா? உமா பழனியின் சூழ்ச்சியா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv