முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரியா விஸ்வநாதனின் புதிய சீரியல் சண்டக்கோழி!

ரியா விஸ்வநாதனின் புதிய சீரியல் சண்டக்கோழி!

சண்டக்கோழி

சண்டக்கோழி

புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த சீரியல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

‘சண்டக்கோழி’ என்ற புத்தம் புதிய சீரியலை மே 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

அண்ணா, சீதா ராமன் மற்றும் சரீகமபா போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஜீ தமிழ் சேனல், 'சண்டகோழி' என்ற தினசரி தொடரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த சீரியல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த சீரியல் குறித்து சண்டக்கோழி நடிகை ரியா விஸ்வநாதன் பேசுகையில், “நியாஸ் சார் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். டிவி சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது. நிச்சயமாக, இந்த நிகழ்ச்சி அனைத்து பார்வையாளர்களையும் மகிழ்விக்கும். இந்த சீரியலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

' isDesktop="true" id="955315" youtubeid="COM9QJfahvM" category="television">

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ப்ரோமோவில், நியாஸ் மற்றும் ரியா விஸ்வநாதன், பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கின்றனர். அந்த சமயம் மழை வர மகா மழையில் ஆட்டம் போட்டு தனது துப்பட்டாவை தூக்கி வீச அது விக்ரம் முகத்தில் போய் விழுகிறது. இதனால் அவன் ஹேய் லூசாடி நீ, துப்பட்டாவை முகத்துலயா வீசுவ என கோபப்படுகிறான். அதற்கு யார் லூசு? நீ லூசு, உன் அப்பா லூசு, உன் அம்மா லூசு, உன் தங்கச்சி லூசு என திட்டுகிறாள். பின் இருவரும் மணக்கோலத்தில் உட்கார்ந்திருக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Zee tamil