முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பூஜாவுக்கு ஷாக் கொடுத்த காதலன்.. பளாரென அறைந்த ஷக்தி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

பூஜாவுக்கு ஷாக் கொடுத்த காதலன்.. பளாரென அறைந்த ஷக்தி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

serial update

serial update

Meenakshi Ponnunga serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் திடீரென பூஜா வெற்றியுடன் கல்யாணத்தை நிறுத்திய நிலையில் பூஜாவின் பழைய காதலன் ரோஹித் வந்ததால் பூஜா கல்யாணத்தை நிறுத்தியது தெரிய வருகிறது.

மாஸ்டர்ல விஜய் அண்ணாவை நான் காப்பாத்துவேன்... எல்லோரும் கலாய்ச்சாங்க - சாந்தனு வேதனை

ஆனாலும் பூஜா உண்மையான காரணத்தை மறைத்து கல்யாணத்தை நிறுத்தியதற்காக ரங்கநாயகியிடம் மன்னிப்பு கேட்க, ரங்கநாயகியும் பூஜாவை புரிந்து கொள்கிறாள். பிறகு சக்தியை கல்யாண வேலைகளைக் கவனிக்க சொல்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக பூஜா வெற்றியிடம் லவ் ஃபீலில் பேச, வெற்றி சக்தியை நினைத்துக்கொண்டு கையில் தாஜ்மஹாலை வைத்துக்கொண்டு பூஜாவை அலட்சியப்படுத்த, கடுப்பாகும் பூஜா தாஜ்மஹாலை உடைக்க, சக்தி பூஜாவை அறைகிறாள்.

மறுபக்கம் நீதிமணியை தேடி புஷ்பா போலிஸுடன் வர, யமுனாவும் துர்காவும் நீதிமணிக்கு அம்மை போட்டிருக்கு என்று சொல்லி சமாளித்து, நீதிமணியைக் காப்பாற்றுகின்றனர்.

top videos

    இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv