முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி - பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!

கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி - பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

ராஜஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ, கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி என பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்பி பாட்டி தீபாவை பார்த்துவிட்டு 'தீபா தீபா' என கத்த இதை பார்த்த அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் ராஜஸ்ரீ அது தீபா கிடையாது உங்களுக்கு கண்களை ஏதோ பிரச்சனை இருக்கு என சொல்ல செல்பி பாட்டி இல்ல அது தீபா தான் என வாக்குவாதம் செய்கிறார்.

இருந்தாலும் ஒரு வழியாக  பாட்டியை சமாளிக்கும் ராஜ ஸ்ரீ பிறகு தீபாவிடம் வந்து எதுக்கு நீ வெளியே வந்த என திட்டுகிறாள். அதன் பிறகு கச்சேரி தொடங்க தீபா ரூமில் இருந்து பாட ரூபஸ்ரீ வாய் அசைக்க கச்சேரி நடைபெறுகிறது.

இதற்கிடையில் கார்த்தி ஒரு பக்கம் கதிரை தேடி அலைய நட்சத்திரா இன்னொரு பக்கம் போனை தேடி அலைய ஒரு இடத்தில் போனை பார்த்து எடுக்க போக அதற்குள் அபிராமி அவளை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைக்கிறாள். தீபா சோகமாக பாடி முடிக்க கச்சேரி முடிந்து அனைவரும் ரூபஸ்ரீ-ஐ பாராட்டுகின்றனர்.

அதன் பிறகு செல்பி பார்த்து மட்டும் போதுமா டான்ஸ் ஆடலாம் என சொல்லி எல்லோரையும் கூப்பிட்டு டான்ஸ் ஆட சித்தர் சொன்னதை அபிராமிக்கு ஞாபகம் வர அவள் சோகமாகிறாள். திரும்பவும் கச்சேரி தொடங்க அப்போது போன் ராஜஸ்ரீ அருகே வந்து விழ அதை

அவள் எடுத்து வைத்துக் கொள்கிறாள். அதற்கு அடுத்ததாக திரும்பவும் கச்சேரி நடந்து முடிகிறது.

அதனைத் தொடர்ந்து ராஜ ஸ்ரீ தீபாவுக்கு நன்றி சொல்லி அவளை மண்டபத்தில் பின்பக்கமாக வீட்டுக்கு அழைத்து செல்லும்போது தீபா கதிரை பார்த்துவிட்டு அவனுடன் சண்டை போடுகிறாள். இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையில் தீபா கதிரின் மண்டையில் அடிக்க அவன் மயங்கி கீழே விழுகிறான். கூடவே தீபா கழுத்தில் இருந்த முருகன் டாலரும் கீழே அறுந்து விழுகிறது.

அதன் பிறகு தீபா இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்ல மீனாட்சி கார்த்தியிடம் சொல்ல இதை ஒட்டு கேட்கும் நட்சத்திரா இருவரும் வருவதற்குள் கதிரை அங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறாள். இதனால் இந்த முறையும் கார்த்தி கதிரை பார்க்க முடியாமல் ஏமாறுகிறான். அங்கே தீபா கழுத்தில் இருந்து விழுந்த டாலரை பார்த்த மீனாட்சி சரி வாங்க போகலாம் என கார்த்திகை சமாளித்து அழைத்து வருகிறாள்.

Also read... விஜய்யின் 68வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்!? லேட்டஸ்ட் தகவல்!

தீபாவை விட்டுவிட்டு வரும் ராஜஸ்ரீ ஃபோனில் இருக்கும் வீடியோவை பார்க்க நட்சத்திராவின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவளுக்கு தெரிய வருகிறது. நட்சத்திரா முகத்திரையை கிழிக்க இந்த ஆதாரம் ஒன்று போதும் என சந்தோஷப்படுகிறாள் ராஜ ஸ்ரீ இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv