முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ரெடியாகும் சிறப்பு கிளைமேக்ஸ்!

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ரெடியாகும் சிறப்பு கிளைமேக்ஸ்!

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் மனிஷாஜித், திவ்யா பத்மினி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் சிறப்பு க்ளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது. இந்த சீரியல் நாளை மே 20-ம் தேதியுடன் முடிவடையும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2022-ல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல் 270 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பான நிலையில் தற்போது முடிவடைகிறது. கன்னத்தில் முத்தமிட்டால் இந்தி தொலைக்காட்சி தொடரான 'துஜ்சே ஹை ராப்தா'வின் ரீமேக்காகும். இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான இந்த சீரியல் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் மனிஷாஜித், திவ்யா பத்மினி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவர்களை தவிர மனுஷ், ஆஷாராணி நாகேஷ், ஆண்ட்ரூஸ் ஜேசுதாஸ், பிரியங்கா, சரத் சந்திரா, மௌனிகா செந்தில்குமார், சாணக்யா, தனலட்சுமி சிவா, அம்மு ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலை எழுதி இயக்கியவர்கள் வி.எம்.செந்தில் குமார் மற்றும் வித்யா. சனந்த் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இதில் மனிஷாஜித், மௌனிகா செந்தில்குமார், சாணக்யா உள்ளிட்ட கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Zee tamil