ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா வந்து அப்புச்சியை வெளியே போக சொன்ன விசயம் தெரிந்து உமாவிடம் சண்டையிடுகிறாள்.
பறந்த ஆர்டர்.. அரசியல் களத்திற்கு தயாராகும் விஜய்..? தொகுதி வாரியாக விவரங்கள் சேகரிக்க உத்தரவு!?
அப்போது வீட்டைவிட்டு வெளியேறும் சிதம்பரத்திடம் அமுதா தன்னுடன் வரச்சொல்லி கேட்க, அதற்கு நான் இப்படி ஆனதற்கு நீயும் தான் காரணம் என சொல்லிவிட்டு செல்கிறார்.
அமுதா தன் அப்புச்சி அப்படி பேசிவிட்டார் எனவும் தன்னால் அவர் இப்ப கஷ்டப்படுகிறார் எனவும் சொல்லி அழ, அவளுக்கு செந்தில் ஆறுதல் சொல்கிறான். பிறகு நாகு புவனாவிடம் நீ இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் இப்படி எல்லாம் நடப்பதாக திட்டுகிறாள்.
அதன் பிறகு அமுதா உமாவிடம் நீ இந்த நாளை குறிச்சி வச்சுக்கோ, அப்புச்சி கிட்ட இருந்து சொத்தை எல்லாம் பறிச்சி எப்படி வெளியே அனுப்பினியோ அதே மாதிரி உங்களை குடும்பத்தோட நடு ரோட்டுல நிப்பாட்டுறேன் என சவால் விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial