முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஆர்வமாக இருக்கிறேன்'.. சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா!

'ஆர்வமாக இருக்கிறேன்'.. சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திறமையான பாடகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர் சீசன் 9' நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க, தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளனர். ஆம், இதன் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொள்ளவிருக்கிறார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வது குறித்துப் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “இதுபோன்ற அற்புதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற அற்புதமான மற்றும் திறமை நிகழ்ச்சிகளைப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மேலும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் மற்றும் பி.உன்னிகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி" என்றார்.

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திறமையான பாடகர்கள் இடம்பெற்றுள்ளனர். பின்னணிப் பாடகர்களான பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, ஆரம்பம் முதலே பல அற்புதமான தருணங்களைக் கண்டுள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் ஒரு பெரிய ஜூரி குழுவும் இடம்பெற்றுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv