முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் வீட்டின் பில்லரும், வாழ்க்கையின் பில்லரும்... வி.ஜே.மணிமேகலையின் லேட்டஸ்ட் படம்!

என் வீட்டின் பில்லரும், வாழ்க்கையின் பில்லரும்... வி.ஜே.மணிமேகலையின் லேட்டஸ்ட் படம்!

வி.ஜே.மணிமேகலை ஹுசைன்

வி.ஜே.மணிமேகலை ஹுசைன்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக பங்கேற்றார் மணிமேகலை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களது புதிய வீட்டின் கட்டுமான பணிகளுக்கு மத்தியில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் வி.ஜே.மணிமேகலை.

சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர். அதில் ஒருவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை. இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்த மணிமேகலை தன் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இவர்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் கிராமம் ஒன்றிற்கு தனது கணவர் உசைனுடன் சென்ற மணிமேகலை, அங்குள்ள நண்பர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு, அந்த வீடியோக்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)அதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், தாங்கள் பண்ணை வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது கணவர் ஹுசைனுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “வீட்டின் பில்லர் வலது பக்கம், என் வாழ்க்கையின் பில்லர் இடது பக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் லைக்ஸ் போட்டிருக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: