முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விலங்கு வெப் சீரிஸ் 2ம் பாகம் வருதா? முருகன் கோயிலில் விமல் சொன்ன அப்டேட்!

விலங்கு வெப் சீரிஸ் 2ம் பாகம் வருதா? முருகன் கோயிலில் விமல் சொன்ன அப்டேட்!

விலங்கு

விலங்கு

இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் விலங்கு வெப் சீரிஸை இயக்கியிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விமல் நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். இப்போது ‘மா.பொ.சி’ என்ற புதிய படத்திலும், மைக்கேல் என்ற இயக்குநரின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். இது தவிர ‘கலகலப்பு’, ‘தேசிங்கு ராஜா’ வரிசையில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.

இதைத்தொடர்ந்து ‘விலங்கு’ தொடரின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இறைவன் அருளால் நல்ல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறேன். ‘விலங்கு’ இணையத் தொடருக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ள படங்களை தேடித் தேடி நடிக்கிறேன்.‘மா.பொ.சி’ 80-களில் நடக்கும் கதை. அதற்கேற்ற காஸ்டியூமில், ஹேர்ஸ்டைலில் வித்தியாசமாக உருவாகும் இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் விலங்கு வெப் சீரிஸை இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vimal, Zee tamil