தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒற்றுமையாக இருந்த கோதை குடும்பத்தை பிரிக்க வேண்டும் என ஒருபக்கம் சந்திரகலாவும், மறுபுறம் அர்ஜுன் குடும்பமும் ராத்திரி பகலாக வேலை செய்தனர். சேர்மனாக வேண்டும் என்ற வெறியில் தமிழை வீழ்த்த, தானே ஆள் வைத்து தன்னை கத்தியில் குத்த வைத்த அர்ஜுன், அந்த பழியை தூக்கி தமிழ் மேல் போட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆனான்.
தன் கணவன் அர்ஜுனை அண்ணன் தமிழ் தான் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் என ராகினியும் நம்பிவிட்டாள். தமிழ் என்ன சொல்ல வருகிறான் என்பதை காது கொடுத்து கேட்காமலேயே இதை கோதையும் நம்பி, அவனை கொலைக்காரன் எனக் கூப்பிட்டதைக் கேட்டு உடைந்து போனான் தமிழ். உடனே தனது மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
தற்போது குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறான் தமிழ். ஆனால் சரஸ்வதி, வசு, அபி, மாமனார் ஆகியோருடன் தொடர்பில் இருக்கிறாள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சரஸ்வதியிடம் ஃபோன் பேசியவாரே மாடிப்படியில் தடுக்கி விழுகிறாள் வசு. அவள் அலறுவதைக் கேட்டு, வீட்டுக்கு ஓடி வருகிறாள் சரஸ்வதி, அங்கு யாரும் இல்லை. உடனே அவளை மருத்துவமனையில் சேர்க்கிறாள். அதற்குள் கோதை, நடேசன், கார்த்தி, சந்திரகலா என அனைவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
அப்போது ரத்தம் வேண்டும் என நர்ஸ் கேட்க, நான் தருகிறேன் என சரஸ்வதி சொல்கிறாள். பின்னர் குழந்தை பிறந்ததும் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் நர்ஸ், சரியான நேரத்துக்கு அவங்களை இங்க கொண்டு வந்து சேர்த்த சரஸ்வதிக்கு நன்றி சொல்லுங்க என்கிறார்.
குழந்தையை கொண்டு வந்து சரஸ்வதியிடம் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார் சந்திரகலா. உடனே நடேசன், கார்த்தி ஆகியோரும் கை எடுத்து கும்பிடுகிறார்கள். இதைப்பார்த்து கண்ணீர் வடிக்கிறார் கோதை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv