விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் விரைவில் துவங்க உள்ள நிலையில், அதன் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்களுள் முக்கியமானது சூப்பர் சிங்கர். இது பெரியவர்களுக்கு தனியாகவும், குழந்தைகளுக்கு தனியாகவும் வெவ்வேறு சீசன்களாக ஒளிபரப்பட்டு வருகிறது. விரைவில் துவங்கவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இருபது திறமையான குழந்தை பாடகர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரபல பின்னணி பாடகர்கள் கே.எஸ்.சித்ரா, மனோ, ஆனந்த் வைத்தியநாதன் மற்றும் மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகிறார்கள். நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் ஒரு பெரிய ஜூரி குழுவும் இடம்பெற்றுள்ளது.
சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்ட பல போட்டியாளர்கள், தங்கள் ஆத்மார்த்தமான ஃபெர்பார்மென்ஸால் பிரபலமடைந்தனர். விரைவில் துவங்கவிருக்கும் அடுத்த சீசனில் பல இசைத் தருணங்களும் ஃபன் ஃபேக்டர்களும் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் தற்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கென்லி சிஜா என்ற போட்டியாளரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சிஜா, பாடகியாவது தான் தனது கனவு என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Tamil News, Vijay tv