முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக வேண்டுமா? - இதோ அரிய வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க!

விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக வேண்டுமா? - இதோ அரிய வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க!

விஜய் டிவி ஹீரோயின் தேர்வு

விஜய் டிவி ஹீரோயின் தேர்வு

விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் தோன்றிய பலரும் வெள்ளித்திரையில் மக்கள் கொண்டாடும் ஸ்டார்களாக பரிணமித்து உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது விஜய் டிவி.

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் தோன்றிய பலரும் வெள்ளித்திரையில் மக்கள் கொண்டாடும் ஸ்டார்களாக பரிணமித்து உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் டிவி தான் என்று அவர்களே தங்கள் வாயால் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது விஜய் டிவி-யின் தனித்துவத்திற்கு உதாரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிய கதாநாயகி தேடலை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி. தங்களின் சீரியலுக்கான சிறந்த தமிழ் பேசும் கதாநாயகியை அடையாளம் காண தற்போது வேட்டையை துவங்கியுள்ளனர்.

இதில் பங்குபெற நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். நடிப்பில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். தமிழ் பேசத்தெரிந்திருக்க வேண்டும். தன்னம்பிக்கையுள்ள, தைரியமான, நகைச்சுவையுணர்வுள்ள, கேமரா பயம் இல்லாதவராக இருக்க வேண்டும்.

இதில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு விஜய் டிவி மெகா தொடரில் நடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான நேர்க்காணல் மே 28-ம் தேதி காலை 8 மணி முதல், சென்னை, சேத்துப்பட்டிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv