முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் வருகிறது விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சி ’ரெடி ஸ்டெடி போ’.!

மீண்டும் வருகிறது விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சி ’ரெடி ஸ்டெடி போ’.!

ரெடி ஸ்டெடி போ

ரெடி ஸ்டெடி போ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி ஃபன் மற்றும் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாத வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிளாக்பஸ்டர் கேம் ஷோ-வான ரெடி ஸ்டெடி போவின் புதிய சீசன், இந்த ஞாயிறு 11 ஜூன் 2023 அன்று மதியம் 1.30 மணி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான இந்த பிளாக்பஸ்டர் கேம் ஷோ, அதன் ஃபன்னான சுற்றுக்களுக்காக ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தது. இதில் இளம் பெண்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.

இந்த பிரபல நிகழ்ச்சியை, விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால், மற்றும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி புகழ் ரக்‌ஷன் இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். இந்நிகழ்ச்சி ஃபன் மற்றும் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாத வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும்.

ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் வளரும் மாடல்களில் இருந்து தலா 3 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு அணிகளைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி 3 வெவ்வேறு சுற்றுகளுடன் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும். மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் இரு அணியிலிருந்தும் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவர். அதிகபட்ச புள்ளிகளுடன் வெற்றி பெறும் அணி பரிசுகளையும் வெல்லும். இருப்பினும் விளையாட்டு அதோடு முடியாது. தோல்வியடைந்த டீமுக்கு மிகவும் சேலஞ்சிங்கான பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.

ஜூன் 11, 2023 அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv