பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் அவனது மாமனார் ஜனார்த்தனன். அதனால் அவர் மீனாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கண்ணன் - ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். தற்போது ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். பிரிந்த குடும்பம் எப்போது ஒன்று சேரும் என பார்க்க காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
மனைவி மீனா மற்றும் மகள் கயலுடன் மாமனார் வீட்டுக்கு வந்த ஜீவா, அவரது சூப்பர் மார்க்கெட்டை நிர்வகித்து வருகிறான். ஆனால் அவ்வப்போது மாமனார் ஜனார்த்தனன் ஜீவாவை அவமானப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இன்றைய எபிசோடில் “ஜீவா சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஜனார்த்தன் அவனிடம் பேசுகிறார். நம்ம கடைக்கு வழக்கமா அரிசி போடுறவங்களை வர வேணாம்ன்னு சொல்லிட்டீங்களா என கேட்கிறார். அவங்க போடுற அரிசில கல்லா இருக்கு. கஸ்டமர் அடிக்கடி கம்பெளைண்ட் பண்றாங்க. அதனால தான் மாத்திட்டேன் என்கிறான்.
உடனே ஜனார்த்தன், எனக்கும் அந்த அரிசி போடுறவருக்கும் ரொம்ப நாள் பழக்கம். இப்படி திடீர்ன்னு வேணாம்ன்னு சொல்லி இருக்கீங்க. எனக்கிட்ட ஒருவார்த்தை கேட்டு இருக்கலாம்ல மாப்பிள்ளை. இனிமே கடை விஷயமா என்ன இருந்தாலும் என்கிட்டயும் கேளுங்க. அது உங்க பிசினஸ் தான். ஆனாலும் நான் யார்க்கிட்ட எப்படி பழகுறேன்னு உங்களுக்கு தெரியாதுல” என்கிறார்.
ஜனார்த்தன் திடீரென இப்படி சொன்னதால் ஜீவா அப்செட் ஆகிறான். பின்னர் மீனா அவனை சமாதானப்படுத்துகிறாள். மறுநாள் கடைக்கு கிளம்பும் போதும் ஜனார்த்தனன், மீண்டும் ஜீவாவை அவமானப்படுத்த, அவனுக்காக அப்பாவிடம் சண்டை போடுகிறாள் மீனா. ஜனார்த்தனன் மகளை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv