முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ரெங்கநாதன், கிழக்கு வாசல் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக களமிறங்கவிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கண்ணன் - ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண்படும்படி ஒற்றுமையாக இருந்தனர். தற்போது ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா என்பதை காண ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம், பட வாய்ப்புகளால் சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல், ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ரெங்கநாதன், கிழக்கு வாசல் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக களமிறங்கவிருக்கிறார். நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரியல் விரைவில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்நிலையில் ஜீவா, கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாக நடித்தால், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாகவும், ஜூன் மாதத்திற்குள் அது முடிந்து விடும் என்றும், அதன்பின் புதிய சீரியலான கிழக்கு வாசல் தொடங்குவதற்கு சரியாக இருக்கும் என்றும்” தகவல்கள் கூறுகின்றன.

2018 அக்டோபரில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv