முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாதனைப் படைத்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

சாதனைப் படைத்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எப்போதும் இடம் பிடித்து வருகிறது.

இதனை படப்பிடிப்பு தளத்தில் குழுவினர் வெகுவிமர்சையாகக் கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியை அவர்கள் கேக் வெட்டி பகிர்ந்துக் கொண்டனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சீரியலின் புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் சிவசேகர், "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய மைல்கல்லை எட்டடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தத் தொடரின் முழுமையான 'பயணம்' என் கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.

இது குறித்து நடிகர் வெங்கட் ரங்கநாதன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "இயக்குனர்கள் சிவசேகர் மற்றும் டேவிட் சார்லி சார் ஆகியோருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, பாண்டியன் ஸ்டோர்ஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட் குறித்துப் பேசிய நடிகை ஹேமா ராஜ், "பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மேலும் 1200-வது எபிசோடை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Pandian Stores, Vijay tv