முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மோதலும் காதலும்... புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

மோதலும் காதலும்... புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

மோதலும் காதலும்

மோதலும் காதலும்

'மோதலும் காதலும்’ சீரியலை சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

’மோதலும் காதலும்’ என்ற புதிய தமிழ் சீரியலை ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

அனைத்து சேனல்களும் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் வெவ்வேறு கதைகளங்களில் ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா 2 போன்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் டிவி 'மோதலும் காதலும்' என்ற சீரியலை ஒளிபரப்ப தயாராகி வருகிறது. ஆதாரங்களின்படி, மோதலும் காதலும் சீரியல், விக்ரம் (சமீர்) மற்றும் வேதா (அஸ்வதி) இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம்.

' isDesktop="true" id="943924" youtubeid="rEheYTvrv1k" category="television">

'மோதலும் காதலும்’ சீரியலை சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர். மோதலும் காதலும் சீரியலில் சமீர், அஸ்வதி, ஜனனி, சந்தோஷ், நளினி, உமா, கிரீஷ், ரம்யா, ஆலியா மற்றும் நரசிம்ம ராஜு ஆகியோர் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv