முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வந்துவிட்டது விஜய் டிவி-யின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4!

வந்துவிட்டது விஜய் டிவி-யின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4!

ஸ்டார்ட் மியூசிக் 4

ஸ்டார்ட் மியூசிக் 4

சவுண்ட் பார்ட்டி, பயாஸ்கோப், ஒழுங்கா பாடு இல்லனா ஸ்ப்ரே அடிச்சிடுவேன் போன்ற சுற்றுகள், நிகழ்ச்சியை கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி-யின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் புத்தம் புதிய 4-வது சீசனை, புதிய சுற்றுகளுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மீண்டும் பார்க்கலாம்.

முதல் மூன்று சீசன்கள் பார்வையாளர்களை கவர்ந்ததால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. பார்வையாளர்களிடையே சூப்பர்-டூப்பர் ஹிட்டானதால், இதன் அடுத்த சீசன் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த கேம் ஷோ இரண்டு பிரபல அணிகளைக் கொண்டுள்ளது (ஒரு அணிக்கு 3 நபர்கள்). இரு அணிகளும் இசை சார்ந்த விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள். இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய பல்வேறு சுவாரஸ்யமான சுற்றுகள் இதில் இடம்பெறும். ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு பரிசுத் தொகை அணிகளுக்கு வழங்கப்படுகிறது. போட்டிச் சுற்றுகளின் முடிவில், வெற்றி பெறும் அணி பரிசுத் தொகையையும் பரிசுகளையும் எடுத்துச் செல்லலாம்.

சவுண்ட் பார்ட்டி, பயாஸ்கோப், ஒழுங்கா பாடு இல்லனா ஸ்ப்ரே அடிச்சிடுவேன் போன்ற சுற்றுகள், நிகழ்ச்சியை கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பாண்டே தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்குகிறார். ஸ்டார்ட் மியூசிக் 4-வது சீசனின் முதல் எபிசோடில் ‘பாக்யலட்சுமி’ சிரியல்குழுவின் சுசித்ரா, ரேஷ்மா, ரித்திகா, திவ்யா, விகாஸ் மற்றும் கம்பம் மீனா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV show, Vijay tv