முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் அடுத்த சீசன்.. சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் சின்னத்திரை ரசிகர்கள்!

பிக்பாஸ் அடுத்த சீசன்.. சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் சின்னத்திரை ரசிகர்கள்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

கொரோனா காலகட்டத்திற்குப் பின் அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடியும்படி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் அறிமுகமானது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இவையனைத்தையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தவிர, ஹாட் ஸ்டாரில் கடந்த வருடம் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவர் விலக, நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இறுதியாக நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னரானார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எப்போதும் ஜூன் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவார்கள். ஆனால் கொரோனா காலகட்டத்திற்குப் பின் அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடியும்படி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஜூன் மாதத்திலேயே துவங்கவிருக்கிறதாம். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம் தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil