முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்கியா சொன்ன வார்த்தையால் திகைத்து நின்ற கோபி... பாக்கியலட்சுமி சீரியலில் பரபர கட்டம்!

பாக்கியா சொன்ன வார்த்தையால் திகைத்து நின்ற கோபி... பாக்கியலட்சுமி சீரியலில் பரபர கட்டம்!

சீரியல்

சீரியல்

“உன் இஷ்டத்துக்கு விட முடியாது” என கோபி சொல்ல, “என்னை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்ல” எனக் கூறுகிறாள் பாக்யா.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு தகுந்த நோஸ் கட் கொடுத்திருக்கிறார் பாக்யா.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறான். அவ்வப்போது பாக்கியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். கேட்டரிங் தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றி வரும் பாக்கியா, கூடவே பல பிரச்னைகளையும் சாமாளித்து வருகிறாள்.

அப்படி ஒருநாள் பாக்கியாவுக்கு ஆங்கிலம் தெரியாது என ராதிகா அவமானப்படுத்த, அதைக் கற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு சென்றாள். அங்கு சக மாணவரான பழனிச்சாமியின் (ரஞ்சித்) நட்பு கிடைக்கிறது. அவருடன் பாக்யா பழகுவதைப் பார்த்து உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தார் கோபி.

' isDesktop="true" id="914723" youtubeid="v2kpPyyEcOs" category="television">

இந்நிலையில் வாக்கிங் போகும் பாக்யாவை வழி மறித்து, “உன்ன பாக்கத்தான் வந்தேன். யார் அந்த ஆளு? அந்த ஆளு கூட பைக்ல எல்லாம் போற?” என சத்தம் போடுகிறார் கோபி. அதற்கு, ”உங்களுக்கு அதிலென்ன சார் பிரச்னை?” என்கிறாள் பாக்யா. “உன் இஷ்டத்துக்கு விட முடியாது” என கோபி சொல்ல, “என்னை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்ல” எனக் கூறுகிறாள் பாக்யா. அதோடு, “நான் என்ன பண்ணனும், என்ன பண்ணக் கூடாதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றதோடு Don't Follow Me என சொடக்குப் போட்டு கூறுகிறாள். இதைப் பார்த்த கோபி அதிர்ச்சியில் உறைகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv