முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காபியால் வரும் சண்டை... ராதிகா செயலால் அதிர்ச்சியடைந்த கோபி

காபியால் வரும் சண்டை... ராதிகா செயலால் அதிர்ச்சியடைந்த கோபி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ஒரு பக்கம் தனது குடும்பத்தினர் மறுபக்கம் ராதிகா, இவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறான் கோபி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரே வீட்டில் பாக்கியா மற்றும் ராதிகாவுடன் இருக்கும் கோபி தினம் தினம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். தற்போது ஒரு காபியில் புதிய பிரச்னை வெடித்துள்ளது.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டில் வசித்து வந்தான். அவ்வப்போது பாக்கியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். தற்போது பாக்கியா வீட்டுக்கே கோபியும், ராதிகாவும் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தது அங்கு இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை.

' isDesktop="true" id="962866" youtubeid="vNwQenaPw0I" category="television">

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பாக்கியாவிடம் கோபிக்கு காபி கேட்கிறார் ஈஸ்வரி. ஆனால் அதை போட்டுத்தர மறுக்கிறாள் பாக்கியா. பின்னர் ஈஸ்வரியே காபி போட்டு, இனியாவிடம் கொடுத்து கோபிக்கு கொடுக்க சொல்கிறார் ஈஸ்வரி. இனியா கொண்டு வந்து காபியை கொடுத்ததும், கோபத்தில் கப்பை வாங்கி கீழே போட்டு உடைக்கிறாள் ராதிகா.

ஒரு பக்கம் தனது குடும்பத்தினர் மறுபக்கம் ராதிகா, இவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறான் கோபி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv