முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாளை ஓடிடி-யில் வெளியாகும் வெற்றிமாறனின் விடுதலை!

நாளை ஓடிடி-யில் வெளியாகும் வெற்றிமாறனின் விடுதலை!

விடுதலை

விடுதலை

பீரியட் க்ரைம் த்ரில்லர் படமான விடுதலை பகுதி 1 மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரி, விஜய் சேதுபதி மற்றும் பவானி ஸ்ரீ நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் படமான விடுதலை 1 நாளை ஜீ5 ஓடிடி-யில் வெளியாகிறது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை படத்தில் ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, தமிழ், சேத்தன், ஆர்யன், மூணார் ரமேஷ், சர்தார் சத்யா, மணிமேகலை, பாலா ஹாசன், எஸ்.சந்திரன், அசுரன் கிருஷ்ணா, சுந்தர் சிவிசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கிய இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஆர்.வேல்ராஜ் மற்றும் ராமர் கையாண்டிருந்தனர்.

OTT தளத்தில் விடுதலை படம் வெளியாவது குறித்து நடிகர் சூரி பேசுகையில், "விடுதலை படம் பொழுதுபோக்கு மற்றும் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது. OTT மூலம், பார்வையாளர்கள் விடுதலையை தங்கள் வீட்டு திரையில் பார்த்து, குடும்பத்துடன் ரசிப்பார்கள்” என்றார்.

பீரியட் க்ரைம் த்ரில்லர் படமான விடுதலை பகுதி 1 மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில், படம் ரூ.28 கோடி வசூலித்தது. உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் 60 கோடி ரூபாய் வசூலித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran