முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கிழக்கு வாசல் சீரியலில் இணைந்த வேணு அரவிந்த்!

கிழக்கு வாசல் சீரியலில் இணைந்த வேணு அரவிந்த்!

வேணு அரவிந்த்

வேணு அரவிந்த்

ராதிகா சரத்குமாருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக வேணு அரவிந்த் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'வாணி ராணி' சீரியலில் பூமிநாதன் வேடத்தில் நடித்த நடிகர் வேணு அரவிந்த், பின்னர் 'சந்திரகுமாரி'யில் நடித்தார். இப்போது கிழக்குவாசல் தொடரில் இணைந்துள்ளார்.

சீரியலுக்கு நெருக்கமான ஒருவர் பிரபல ஊடகத்திடம் பேசுகையில், "கிழக்கு வாசல் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேணு அரவிந்த் அணுகப்பட்டுள்ளார். அவர் ஒரு கிரே கேரக்டரில் காணப்படுவார். இது சீரியலை மேலும் சுவாரஸ்யமாக்கும்" என்றார்.

நடிகர் வேணு அரவிந்த் பேசுகையில், "கிழக்குவாசல் சீரியலில் கலந்து கொள்வதில் ஆவலாக உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பியுள்ளேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா சரத்குமாருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன். பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். கிழக்குவாசலுடனான எனது புதிய பயணத்தில் அவர்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் வேணு அரவிந்த் நடித்துள்ளார். சீரியல்கள் தவிர அலைபாயுதே, வல்லவன் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ’ஓ மணப் பெண்ணே’ படத்தில் நடித்தார். அதோடு சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கினார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv