தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் டி. ராஜேந்தர்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அர்ச்சனா தொகுத்து வழங்க சீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த சரிகமப நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் டி ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்த வாரம் Dedication ரவுண்ட் நடைபெற உள்ளது. இந்த ரவுண்ட்டில் லண்டனை சேர்ந்த மாதுளாணி தேசப்பற்று பற்றிய பாடல் ஒன்றை பாட டி ராஜேந்தர் கண் கலங்கியுள்ளார்.
View this post on Instagram
ஈழ தமிழர்களால் மட்டும் தான் தாய் மண்ணை இந்த அளவுக்கு நேசிக்க முடியும் என சொல்லியுள்ளார். அதன் பிறகு மாதுளாணியிடம் அவரது தாய் மண்ணை கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய டி ராஜேந்தர் அதை எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்து கொள்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Reality Show