முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தென்றல் 2 சீரியல்!

விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தென்றல் 2 சீரியல்!

தென்றல் சீரியல்

தென்றல் சீரியல்

தென்றல் 2 கோலங்கள் (2009) தொடரின் தொடர்ச்சி என சின்னத்திரை வட்டாரங்கள் கூறுகின்றன

  • Last Updated :
  • Tamil Nadu, India

'கோலங்கள்' சீரியலின் தொடர்ச்சியான மற்றொரு புதிய தொடரை வரவேற்க தமிழ் தொலைக்காட்சி தயாராகிறது. 'தென்றல் 2' என்ற தலைப்பில், புதிய கதைக்களத்துடன் கூடிய புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

தென்றல் 2 தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலில் ஒளிபரப்பப்படும் தென்றல் சீரியலில் ஸ்ருதி ராஜ் மற்றும் தீபக் தினகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹேமலதா, ஸ்ரீவித்யா, ஆடம்ஸ், ஐயப்பன், சாந்தி வில்லியம்ஸ், சாதனா, ஐஸ்வர்யா, நீலிமா ராணி, ஆர்த்தி, ஷியாம் விஸ்வநாதன், ராஜா, சுந்தர், சுஜாதா பஞ்சு, எஸ்.ராஜசேகர், சுஜிதா, எஸ்.என்.லட்சுமி, ஆண்டனி ராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.

இத்தொடரை எஸ்.குமரன் இயக்கியிருந்தார். அவர் தனது சமூக வலைதள நேரலையில், “இதுவரை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். தென்றல் 2 நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும், விரைவில் அது உங்கள் வீட்டு திரைகளில் ஒளிபரப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார். மற்ற விபரங்களை அவர் குறிப்பிடவில்லை.

தென்றல் 2 கோலங்கள் (2009) தொடரின் தொடர்ச்சி என சின்னத்திரை வட்டாரங்கள் கூறுகின்றன. இது பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தொடராக இருந்தது. வெற்றிகரமாக 1340 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Sun TV, TV Serial