முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'!

டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'!

தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மே 21-ம் தேதி ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

டிவி-யில் ஒளிபரப்பாவது குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், "ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரியில் பெரிய நட்சத்திரம், அவரை இயக்கியது ஒரு அற்புதமான அனுபவம். இந்த உலக தொலைக்காட்சி பிரீமியர் மூலம், பார்வையாளர்கள் தங்கள் வீட்டுத் திரைகளில் தி கிரேட் இந்தியன் கிச்சனைப் பார்த்து, குடும்பத்துடன் ரசிப்பார்கள்" என்றார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, போஸ்டர் நந்தகுமார், மேகா, மற்றும் கலைராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சவாரி மற்றும் ஜீவிதா சுரேஷ் குமார் எழுதி, ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை பாலசுப்ரமணியன் மற்றும் லியோ ஜான் பால் கையாண்டுள்ளனர்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம். இதில் நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Zee Tamil Tv