முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்... உருக்கமாக பதிவிட்ட நடிகை!

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்... உருக்கமாக பதிவிட்ட நடிகை!

தாலாட்டு ஸ்ருதிராஜ்

தாலாட்டு ஸ்ருதிராஜ்

ஏப்ரல் 2021-ல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல், 720 எபிசோட்களைக் கடந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல தொலைக்காட்சித் தொடரான தாலாட்டு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதன் சிறப்பு க்ளைமாக்ஸ் எபிசோட் விரைவில் ஒளிபரப்பப்படும்.

தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை நான்கு மணி நேர சிறப்பு அத்தியாயமாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து இக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நிகழ்ச்சியின் புதிய மைல்கல் மற்றும் மெகா க்ளைமாக்ஸ் குறித்து நடிகை ஸ்ருதி ராஜ் கூறுகையில், "தாலாட்டு புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை ஆதரித்த பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. இசைப்பிரியா கதாபாத்திரம் விரைவில் முடிவுக்கு வரவிருப்பது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணத்தைத் தருகிறது" என்றார்.

ஏப்ரல் 2021-ல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல், 720 எபிசோட்களைக் கடந்துள்ளது. இந்த சீரியலில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதா, ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ், தரணி மற்றும் ரிஷி கேசவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தர்ஷிகா, சஹானா ஷெட்டி, வினீத் சுந்தரம், பரதா நாயுடு, சுரேஷ் ஜோஷ்வா, மோகன் சர்மா, சுனிதா, நாதன் ஷியாம், கே.எஸ்.ஜெயலட்சுமி, கற்பகவல்லி, அருண்குமார் பத்மநாபன், ஷ்ரவன், நித்யா ரவீந்திரன், சாண்ட்ரா பாபு, ஹரிப்ரியா இசை, நிலா கிரேசி, வின்சென்ட் ராய், மீனாட்சி, நவிந்தர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடரை பிரதாப் மணி எழுதி இயக்குகிறார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Sun TV