முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’பிரியமான தோழி’ சீரியல் இப்படி ஒரு சாதனையை செய்துள்ளதா? வாழ்த்தும் ரசிகர்கள்!

’பிரியமான தோழி’ சீரியல் இப்படி ஒரு சாதனையை செய்துள்ளதா? வாழ்த்தும் ரசிகர்கள்!

பிரியமான தோழி

பிரியமான தோழி

பிரியமான தோழி சீரியலில் பவித்ராவும் ஆதித்யாவும் நெருங்கிய நண்பர்கள், இவர்களைச் சுற்றியே இந்த சீரியலில் கதை நகர்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல், தற்போது 300 எபிசோட்களைக் கடந்துள்ளது.

இதை ஒளிபரப்பும் சேனலான சன் டிவி ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிரியமான தோழி மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் மற்றும் தீப்தி ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌசிக் கேப்ரியல், அஞ்சலி பாஸ்கர், பிந்து பங்கஜ், தீபா, கணேஷ், பரத் குரு, கீதா சரஸ்வதி, காத்தாடி ராமமூர்த்தி, சுமதி ஸ்ரீ ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரை பி.செல்வம் எழுதி இயக்குகிறார்.

பவித்ராவும் ஆதித்யாவும் நெருங்கிய நண்பர்கள், இவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. பவித்ரா ஆதித்யாவின் மூத்த சகோதரனான அரவிந்தை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆதித்யா தனது பால்ய சிநேகிதியான சங்கவியை நிச்சயதார்த்தம் செய்துக் கொள்கிறார். இதற்கிடையே பவித்ரா மற்றும் அரவிந்தின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரவிந்த் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறார். அடுத்ததாக பவித்ரா - ஆதி வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது பிரியமான தோழி சீரியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Sun TV