முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதிய சாதனை படைத்த சன் டிவி-யின் கயல் சீரியல்!

புதிய சாதனை படைத்த சன் டிவி-யின் கயல் சீரியல்!

கயல் சீரியல்

கயல் சீரியல்

கயல் சீரியல் அக்டோபர் 2021ல் ஒளிபரப்பை தொடங்கியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் தொலைக்காட்சியில் தினமும் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றான கயல், 500 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது.

கயல் சீரியலை ஒளிபரப்பும் சன் டிவி ஒரு சிறப்பு போஸ்டருடன் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.வரும் மே 14ம் தேதி ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பப்படுகிறது. 500 எபிசோடைக் கடந்த கயல் சீரியல் குழுவுக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நிகழ்ச்சியின் புதிய மைல்கல் குறித்து நடிகை சைத்ரா ரெட்டி கூறுகையில், "கயல் புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீரியலின் முழுமையான பயணம் எனது கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.

கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக், இது குறித்து கூறுகையில், "கயல் போன்ற அருமையான சீரியலில் நான் பங்கு பெற்றதில் பெருமை அடைகிறேன். 500-வது எபிசோடை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இயக்குனர்கள் பி.செல்வம் மற்றும் வைதேகி ராமமூர்த்திக்கு எனது சிறப்பு நன்றி" என்றார்.

கயல் சீரியல் அக்டோபர் 2021ல் ஒளிபரப்பை தொடங்கியது. இந்த கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் கோபி, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், மீனாகுமாரி, அய்யப்பன், ஹேமா ஸ்ரீகாந்த், அபினவ்யா தீபக், ஜானகி தேவி, ராஜேஷ், தெசினா, முரளிதர் ராஜ், சுமங்கலி, ஃபவாஸ் ஜயானி, கிரண் மாய், ஹென்ஷா தீபன், ஜெகநாதன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Sun TV