பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் தற்போது 400 எபிசோட்களைக் கடந்துள்ளது.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் திறமையான நட்சத்திர நடிகர்களுக்கு பெயர் பெற்றது. தற்போது இந்த மெகா தொடர் 400 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது. இதை சன் டிவி ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து எதிர்நீச்சல் குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சீரியலின் புதிய மைல்கல் குறித்து நடிகை பிரியதர்ஷினி நீலகண்டன் பேசுகையில், "இயக்குநர் வி.திருசெல்வம் சாருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், எதிர்நீச்சலின் ஒரு பகுதியாக இருப்பதில் ஆசீர்வதிக்கப்படுகிறேன்" என்றார்.
இதைப் பற்றி பேசிய நடிகை ஹரிப்ரியா இசை, "எதிர்நீச்சல் போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மேலும் 400-வது எபிசோடை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
எதிர்நீச்சல் பிப்ரவரி 2022 முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொலைக்காட்சித் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன் மற்றும் ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ் பிகே, விபு ராமன், சத்திய தேவராஜன், பம்பாய் தேவராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஞானம், மோனிஷா விஜய், ரித்திக் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ரத்தினம், ஃபர்சானா அன்சாரி, வைஷ்ணவி நாயக், சோம் சௌமியன், கீர்த்தனா மற்றும் வி.ஜே.தாரா ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். இந்தத் தொடரை வி.திருசெல்வம் எழுதி இயக்குகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV