தமிழ் தொலைக்காட்சியில் தினமும் அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் அருவியும் ஒன்று. TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல இடத்தைப் பிடித்து வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 500 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் அருவி எப்போதும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இதை படப்பிடிப்பு தளத்தில் அருவி குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதயடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அருவி அக்டோபர் 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட் சாலமன் ராஜா, மீனா செல்லமுத்து, சுமங்கலி மற்றும் ஸ்ரீ வித்யா சங்கர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் கன்னட தொலைக்காட்சி தொடரான கஸ்தூரி நிவாசாவின் ரீமேக் ஆகும்.
View this post on Instagram
அருவி கதை சரஸ்வதி என்ற கண்டிப்பான மாமியார் பற்றியது. அவர் தாயில்லாத பெண் அருவியை தனது மருமகளாகக் கொண்டிருக்கிறார். அருவி கருவுற்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் எதிர்பாராத விபத்தால் கருக்கலைந்தது. இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் புகழ் (அருவியின் கணவர்), அருவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்களின் குழந்தை அவள் வயிற்றில் இருப்பதாகவும் நினைக்கிறான். அவன் உண்மையை அறிந்து கொள்வானா என்பது விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.