முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சன் டிவி-யின் புதிய சீரியல்.. முக்கிய ரோலில் நடிக்கும் சோனியா போஸ் வெங்கட்!

சன் டிவி-யின் புதிய சீரியல்.. முக்கிய ரோலில் நடிக்கும் சோனியா போஸ் வெங்கட்!

சோனியா போஸ் வெங்கட்

சோனியா போஸ் வெங்கட்

நடிகை சோனியா போஸ் வெங்கட் தனது மூன்று வயதில் மலையாளத் திரைப்படமான ‘இவள் ஒரு நாடோடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல சீரியல் நடிகை சோனியா போஸ் வரவிருக்கும் சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விருது பெற்ற நடிகை சோனியா போஸ் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். தற்போது தனது புதிய தமிழ் தொலைக்காட்சி தொடரான "சபாஷ் மீனா”வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்தத் தொடரில் இரண்டு மகள்களுக்கு தாயாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

டிவி நடிகர் அபிஷேக் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தராகம் சீரியலில் நடித்த நடிகை இந்து சௌத்ரி இந்த சபாஷ் மீனா சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இலக்கியா புகழ் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகை சோனியா போஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த புதிய சீரியலின் தொடக்கத்தை ரசிகர்கள் பலர் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகை சோனியா போஸ் வெங்கட் தனது மூன்று வயதில் மலையாளத் திரைப்படமான ‘இவள் ஒரு நாடோடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பேபி சோனியா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதோடு பேபி ஷாலினி உள்ளிட்ட பல குழந்தை நட்சத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். 1987 ஆம் ஆண்டு ‘நம்பரத்தி பூவு’ என்ற திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial