மாரி சீரியலில் இருந்து நடிகர்கள் சோனா ஹெய்டன் மற்றும் முகேஷ் கண்ணா விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்கள் சீரியலில் இருந்து விலகுவதாக முன்பே வதந்திகள் பரவினாலும், சோனா ஹெய்டன் மற்றும் முகேஷ் இதுகுறித்து அமைதி காத்தனர். சமீபத்தில், அவர்கள் இருவரும் சீரியலில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தனர்.
சோனா ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம்... நான் அதிகாரப்பூர்வமாக மாரி சீரியலில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு மாரி சீரியலில் ஆதரவை வழங்கியதற்கு நன்றி... அனைவரையும் வேறொரு திட்டத்தில் சந்திக்கிறேன். நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
முகேஷ் கண்ணா தனது சமூக ஊடகத்தில் உணர்வுப்பூர்வமான வார்த்தைகளைப் பகிர்ந்துக் கொண்டார். “வணக்கம் என் அன்பான ரசிகர்களே, கனத்த இதயத்துடன், நான் மாரி சீரியலில் ‘அரவிந்த்’ வேடத்தில் இருந்து விலகுகிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இருந்த எனக்கு, நடிகராக எனது நடிப்பையும் திறமையையும் வெளிப்படுத்த எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ஒரு மாதத்திற்கு 2-3 நாட்களுக்கு மேல் வேலை செய்யவில்லை.
எந்த விதமான விளம்பரங்களும் கிடைத்ததில்லை. எந்த ரியாலிட்டி ஷோக்களுக்கும் என்னை அழைக்கவில்லை. நான் ஒரு வெளியாள் போல் உணர்ந்தேன். இது பொருளாராத ரீதியாக என்னைப் பாதித்தது. தொழில் ரீதியாக எந்த விதமான முன்னேற்றத்தையும் அல்லது வளர்ச்சியையும் நான் காணவில்லை. ஆனால் நான் சில அற்புதமான கலைஞர்களுடன் பணிபுரிந்தேன். தயாரிப்பு நிறுவனம் உண்மையில் என்னை நன்றாக கவனித்துக்கொண்டது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் எதிர்கால அத்தியாயங்களுக்கு குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.
ஒருசில வேடங்களில் நடித்திருந்தாலும், ஆயுதம், வில்லன், ஆந்திராவாலா, பொன் மேகலை, மிருகம், ரௌத்திரம், ஸ்வர்ணம், குசேலன், கதைநாயகுடு, குரு என் ஆளு, நரி, அழகர் மாலை, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர், சில்லுனு ஒரு காதல் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதோடு அபி டெய்லர், ரோஜா மற்றும் மாரி போன்ற பல்வேறு தொடர்களிலும் நடித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Zee tamil