ஜாலியாக துவங்கிய விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஏற்கனவே 3 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்களே மீதமிருக்கின்றனர்.
இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. கிஷோர், காளையன் ராஜ் அய்யப்பன் ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் விஜே விஷால் மற்றும் ஷிவாங்கி போட்டி போட்டனர். இதில் விஜே விஷால் நிகழ்ச்சயிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இரண்டுமுறை குக் ஆஃப் த வீக் வாங்கிய விஜே விஷால் எலிமினேட் ஆகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. மேலும், ஷெரின், ஷ்ருஷ்டி, ஷிவாங்கி ஆகியோர் வேண்டுமென்றே காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷிவாங்கி, ''இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன். நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான். எங்களின் சிறப்பானவற்றை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம்.
Okay….so a lot of confusion since the season has started on how I can cook😂I train 6 to 7 hours a day prior the shoot to learn .Not only me. All the cooks there. So much of sacrifice from the daily routine has been done to showcase our best.
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023
கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும். அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv