முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செவ்வந்தி சீரியல் இயக்குநரின் மனைவி எடுத்த விபரீத முடிவு- அதிர்ச்சியில் குடும்பத்தினர்

செவ்வந்தி சீரியல் இயக்குநரின் மனைவி எடுத்த விபரீத முடிவு- அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இயக்குநர் ஓ.என்.ரத்னம் குடும்பம்

இயக்குநர் ஓ.என்.ரத்னம் குடும்பம்

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் தம்பதியினருக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

செவ்வந்தி சீரியல் இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி பிரியா நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்னம் மற்றும் பிரியா இருவருக்கும் திருமணமாகி சுமார் பத்து வருடங்கள் ஆகிறது, இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக தம்பதியினர் குழந்தைகளை பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.என். ரத்தினமும் அவரது மனைவியும் சென்னை வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் தம்பதியினருக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்னத்தின் மகன்கள் பொள்ளாச்சியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அதனால் மகன்களை அழைத்து வர ரத்னம் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, பிரியா உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரியாவின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓ.என்.ரத்னம், அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் போன்ற பல வெற்றித் தொடர்களை இயக்கியவர். இவரது சொந்த ஊர் பொள்ளாச்சி, மனைவி பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: TV Serial