முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திடீரென மாற்றப்பட்ட மாரி சீரியல் ஜாஸ்மின் - காரணம் என்ன?

திடீரென மாற்றப்பட்ட மாரி சீரியல் ஜாஸ்மின் - காரணம் என்ன?

மாரி சீரியல்

மாரி சீரியல்

திடீரென மாற்றப்பட்ட மாரி சீரியல் ஜாஸ்மின்... இனி அவருக்கு பதில் இவர் தான்... காரணம் குறித்து வெளியான தகவல்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. ஆஷிகா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் ஆதர்ஷ் நாயகியாக நடிக்க மெயின் வில்லியாக சோனா நடிக்கிறார். மேலும் அபிதா, மீரா கிருஷ்ணன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த சீரியலில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் சீரியலின் இரண்டாவது வில்லியாக நடித்து வந்தவர் தீப்தி கபீல். இவர் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இதனால் தற்போது அவருக்கு பதிலாக இரட்டை ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மோனிகா நடிக்க தொடங்கியுள்ளார். இனி வரும் நாட்களில் ஜாஸ்மின் கதாபாத்திரம் மோசமான வில்லி வேடமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது கணவன் சூர்யாவுக்கு எதிராக நடக்கும் சதிகளை வீழ்த்தி அவனது உயிரை மாரி எப்படி காப்பாற்றுகிறாள் என பரபர திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv