முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சீதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மகாலட்சுமி.. ராம் எடுத்த முடிவு.. சீதா ராமன் சீரியல் அப்டேட்!

சீதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மகாலட்சுமி.. ராம் எடுத்த முடிவு.. சீதா ராமன் சீரியல் அப்டேட்!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

இன்றைய எபிசோடில் சீதா மகாலட்சுமியிடம் நான் என்ன தப்பு பண்ண எதுக்காக இப்படி பண்ணீங்க என கேட்க என் வீட்டுக்குள்ள எனக்கு பிடிக்காம உள்ள வந்து என்னையே எதிர்த்து கேள்வி கேட்குற, இந்த மகாலட்சுமி யாருன்னு நெனச்ச என பேச சீதா அதிர்ச்சி அடைகிறாள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். நடந்து முடிந்த ரிசப்ஷன் பங்க்ஷனில் மகாலட்சுமி சீதாவை அனைவரும் முன்னிலையிலும் பைத்தியம் என சொல்லி அவமானப்படுத்தினாள்.

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் சீதா மகாலட்சுமியிடம் நான் என்ன தப்பு பண்ண எதுக்காக இப்படி பண்ணீங்க என கேட்க என் வீட்டுக்குள்ள எனக்கு பிடிக்காம உள்ள வந்து என்னையே எதிர்த்து கேள்வி கேட்குற, இந்த மகாலட்சுமி யாருன்னு நெனச்ச என பேச சீதா அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்ததாக ராம் வரும்போது மகாலட்சுமி, சுபாஷ் என எல்லோரும் அப்படியே நல்லவர்கள் வேஷம் போடுகின்றனர். சீதா சத்யா சொன்னதை கேட்டு இப்படி நடந்து கொள்கிறாள் என சொல்ல ராம் சத்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான். மேலும் மகாலட்சுமியின் நாடகத்தை அப்படியே முழுசாக நம்பி சீதாவின் மீது கோபப்படுகிறான்.

Read More : 27 வயதில் வாய்ப்பு - ரஜினியின் அருணாச்சலம் படம் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி - அப்படி என்ன ஸ்பெஷல்?

அடுத்து மகாலட்சுமி உடல்நிலை சரியில்லாதது போல நடிக்க ராம் டாக்டரை அழைத்து வரும்போது சீதா வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க அவளை கண்டுகொள்ளாமல் உள்ளே வருகிறான். ராம் வருவதற்குள் எல்லோரும் கிளிசரின் போட்டு அவன் வரும் போது அழுவது போல நடிக்க அப்போது அங்கு வரும் ராமின் மாமா துரையிடம் கிளிசரின் பாட்டில் சிக்குகிறது. ஆனால் எல்லோரும் இதை சமாளித்து விடுகின்றனர்.

அடுத்து மகாலட்சுமி தன்னுடைய திட்டம் அனைத்தும் அப்படியே நடந்து விட்டது என வீட்டுக்குள் சந்தோஷமாக சிரிக்க சீதா வீட்டுக்கு வெளியே தலைவிரி கோலமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

top videos

    இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

    First published:

    Tags: Entertainment, Zee tamil